சுதந்திர தின பவள விழாவையொட்டி சேலத்தில் காங்கிரசார் நடைபயணம்
சுதந்திர தின பவள விழாவையொட்டி சேலத்தில் காங்கிரசார் நடைபயணம் மேற்கொண்டனர்.
நாட்டின் 75-வது சுதந்திரதின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திரதின பவள விழாவை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக ஜாகீர் அம்மாபாளையத்தில் தொடங்கிய நடைபயணத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு கலந்து கொண்டு அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நடை பயணத்தில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாநகர பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திருமுருகன், பாண்டியன், மாநகர துணை தலைவர் பச்சப்பட்டி பழனிசாமி, மண்டல தலைவர் சாந்தமூர்த்தி, விவசாய பிரிவு தலைவர் சிவக்குமார், 29-வது வார்டு தலைவர் நிஷார் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.