காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்


காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்
x

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்

திருப்பத்தூர்

ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நேற்று திருப்பத்தூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமோக வெற்றி

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெறுவார். மறைந்த அவரது மகன் ஈவேரா திருமகன் பொதுமக்களிடம் மிகவும் எளிமையாக பழகியவர். பல்வேறு பணிகளை கிழக்கு தொகுதியில் செய்து உள்ளார். பொதுமக்களை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து உள்ளார். 1½ ஆண்டு தி.மு.க. ஆட்சி சாதனைக்காகவே, அவரை மக்கள் அமோக வெற்றி அடைய செய்வார்கள்.

ஈரோட்டில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து வைகோ மற்றும் நான், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம். 8 ஆண்டுகளாக மோடி அரசு பல்வேறு முறை விவசாயிகளின் அத்தியாவசிய உர விலையை 200 மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளார்கள்.

பட்ஜெட்டால் பயனில்லை

தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விட குறைவுதான். தென் மாவட்டங்களில் கட்சியை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு, ம.தி.மு.க. பாலமாக இருக்கும்.

தி.மு.க. அரசு தற்போது 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. வைகோவின் சொந்த ஊர் கலிக்கப்பட்டியில் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. அங்கு நான்காவது தலைமுறையாக அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு வைகோ அழைக்கப்பட்டதால் கருப்பு சால்வையை கழற்றிவைத்து விட்டு சென்று வந்தார். இது சமூக வலைதளங்களில் பெரிது படுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட செயலாளர் கண்ணதாசன், காளிலிங்கமன், நகராட்சி கவுன்சிலர் சரவணன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் இமயவர்மன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story