செல்லப்பாண்டியன் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை


செல்லப்பாண்டியன் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
x

முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி

முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் நினைவு நாளையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கலை இலக்கிய பிரிவு மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தென்கலம் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவிபாண்டியன், வக்கீல் பிரிவு இணை தலைவர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story