பணம் பறிப்பு, கொலை வழக்கில் தொடர்பு; 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து


பணம் பறிப்பு, கொலை வழக்கில் தொடர்பு; 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து
x

பணம் பறிப்பு, கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து

திருச்சி

பாலக்கரை மணல்வாரிதுறை ரோடு பகுதியில் பழைய இரும்பு பேப்பர் கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாய் பறித்து சென்ற அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்கிற சந்துரு பொந்துரு (வயது 28) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் சந்திரசேகர் மீது முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து ஒருவரை கொலை செய்த வழக்கு, 2 திருட்டு வழக்குகள், 5 அடிதடி வழக்குகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தாக 2 வழக்குகள் உட்பட 14 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதே போல் காஜாபேட்டை மெயின்ரோடு வாட்டர் டேங்க் அருகில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 900 ரூபாயை றித்து சென்றதாக அதே பகுதியை சேரந்த தாமஸ் ஆன்டனி (22) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் தாமஸ் ஆன்டனி மீது கத்தியை காட்டி பணம் பறித்ததாக 2 வழக்குகள், 2 திருட்டு வழக்குகள், அடிதடி வழக்கு என 5 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, சந்திரசேகர், தாமஸ் ஆன்டனி ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் இருவருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.


Next Story