கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

தாரமங்கலம் அருகே கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சேலம்

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி ராமிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கரியகாளியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கோவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஆலய பரம்பரை அறங்காவலர்கள், திருப்பணி உபய கமிட்டியார்கள், காணியாச்சிக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story