பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், பழையனூர் கிராமத்தில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன கருப்பசாமி, பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா முதல் நாள் விக்னேசுவர பூஜை, அனுக்ஞை, முதல் கால பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 2-ம்நாள் காலை இரண்டாம் கால யாகபூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
யாக சாலையில் இருந்து காலை 10 மணியளவில் கடம் புறப்பாடாகி கோவிலைச் சுற்றி வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் மூலம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு திருமஞ்சனம், பால், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின் விசேஷ தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. விழாவில் பழையனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் கருப்புராஜா மற்றும் கோவில் பூசாரிகள் செய்திருந்தனர்.