கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே வெளியாரி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே வெளியாரி கிராமத்தில் நேற்று முத்து முனியையா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 7-ந்தேதி வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், முதல்கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன. 8-ந்தேதி 2-ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால வேள்வி பூஜை நடைபெற்றது.

இதை. தொடர்ந்து 10.35 மணியளவில் மூலஸ்தான விமானத்திற்கும், முன்கோபுரத்திற்கும் புனிநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம், பட்டு சாத்துதல் திருவருள் பிரசாதம் வழங்குதல் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story