பழையனூர் கிராமத்தில் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
திருப்புவனம் அருகே பழையனூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை
திருப்புவனம் அருகேயுள்ள பழையனூர் கிராமத்தில் உள்ள நவநீத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 8-ந்தேதி மாலை புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, வேத பாராயணம், முதல் கால யாக பூஜை நடைபெற்றன.
தொடர்ந்து, நேற்று காலை மங்கள இசை, 2-ம் கால யாக பூஜை, கோ பூஜை, மண்டப சாந்தி, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணியளவில் யாக சாலையிலிருந்து கும்பம் புறப்பாடாகி கோவிலைச் சுற்றி வலம் வந்தன. தொடர்ந்து, மூலவர் நவநீத பெருமாள் விமானத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அனுமன், கருடாழ்வார், நவக்கிரகம் ஆகிய கோவில் விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் பழையனூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story