கொங்கேசுவரர் ஏழுமுக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கொங்கேசுவரர் ஏழுமுக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொங்கேசுவரர் ஏழுமுக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கொங்கேசுவரர், ஏழுமுக காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கடந்த 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 6-ம் கால யாக பூஜை, கோ பூஜையும், மகா பூர்ணாகுதி, தீபாராதனையும் நடைபெற்றன.

இதை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோபுரங்களுக்கு புனிதநீர் கொண்டு செல்லப்பட்டன. காலை 10 மணியளவில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில் காளையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சவுந்தர்யன் தலைமையில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி உள்பட ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலரும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளருமான சுப.குமரேசன், கொங்கேசுவரர் கோவில் டிரஸ்ட், மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story