உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை- அசன பண்டிகை


உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை- அசன பண்டிகை
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி கிறிஸ்தியா நகரம் தூய மாற்கு ஆலயத்தின் பிரதிஷ்டை மற்றும் அசனப் பண்டிகை நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி கிறிஸ்தியா நகரம் தூய மாற்கு ஆலயத்தின் பிரதிஷ்டை மற்றும் அசனப் பண்டிகை நடந்தது.

தூய மாற்கு ஆலயம்

உடன்குடி கிறிஸ்தியா நகரம் தூய மாற்கு ஆலயத்தின் 175-வது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா கடந்த 20-ந்தேதி மாலை ஜெயபவனியுடன் தொடங்கியது. இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழா நடந்தது. தொடர்ந்து தரிசன பெரும் விழா, தேவ வசன பெருவிழா, மிஷனரி பணி விற்பனை விழா, ஆண்கள் ஐக்கிய சங்க விழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 27-ந் தேதி காலை 8 மணிக்கு மிஷினரி விற்பனை விழா, மாலை 6 மணிக்கு ஆயத்த ஆராதனை நடந்தது. பிரதிஷ்டை விழாவையொட்டி கோவில் மற்றும் தெருக்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பிரதிஷ்டை பண்டிகை

நேற்று அதிகாலை 3 மணிக்கு 175-வது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு நற்செய்தி வழங்கப்பட்டது. தொடர்ந்து 175-வது ஆண்டு நினைவாக தங்க நாணயங்களை ஆலய பரிபாலனர் ஞானராஜ் கோயில் பிள்ளை வெளியிட்டார். 175-வது ஆண்டு சிறப்பு மலர் புத்தகத்தை தலைவர் பால்ராஜ் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் சபை மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அசன விருந்து உணவு வழங்கும் நிகழ்ச்சியும், இரவில் வாண வேடிக்கையும் நடந்தது.

வரலாற்று நாடகம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை, மதியம் 12 மணிக்கு வேத பாட தேர்வு, மாலை 4 மணிக்கு ஞானஸ்நான ஆராதனை, இரவு 7 மணிக்கு தியாக சுடர் என்ற வரலாற்று நாடகம் நடக்கிறது.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேகர குருவானவர் பாஸ்கர் அல்பர்ட்ராஜன், கவுரவ குருவானவர் ஷீபா பாஸ்கர், உதவி குருவானவர் ஜெபத்துரை, சபை ஊழியர் ஆனந்த மணி, பரிபாலனர் ஞானராஜ் கோயில் பிள்ளை, தலைவர் பால்ராஜ், செயலாளர் பிரின்ஸ், பொருளாளர் ஜெபஸ்டின் ஜோசப், ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் ஆண்ட்ரூஸ் மற்றும் சபை மக்கள் செய்து இருந்தனர்.


Next Story