காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா
நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிற்சி நிறைவு
நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு பயிற்சி வகுப்பு 216 ஆண் காவலர்களுக்கு கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்றது. இதில் முப்பெரும் சட்டங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் போன்ற வகுப்புகள் முதன்மை சட்டப் போதகர்களால் நடத்தப்பட்டது. பயிற்சியில் காவலர்களுக்கு மீட்பு பணிகள், முதலுதவி பயிற்சி, கமாண்டோ பயிற்சி, வெடிகுண்டு பிரிவு குறித்து பயிற்சி உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியின் நிறைவு விழா அணிவகுப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற காவலர்கள் பயிற்சி அணிவகுப்பு முடிந்து ஒரு மாதம் அடிப்படை பயிற்சி சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் வழங்கப்பட உள்ளது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் சுப்பிரமணியன், மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, முதன்மை சட்ட போதகர் சாந்தி, முதன்மை கவாத்து போதகர் சுனைமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.