கட்டுமான நிறுவன உரிமையாளர் கார் எரிப்பு


தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கட்டுமான நிறுவன உரிமையாளர் கார் எரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் செந்தில்குமார் (34). கட்டிடம் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே தனது காரை நிறுத்தி இருந்தாராம். நள்ளிரவில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கார் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்மநபர்கள் காருக்கு தீவைத்தது தெரியவந்தது. அதன்பேரில் முன்விரோதம் காரணமாக கார் தீ வைத்து எரிக்கப்பட்டதா?, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story