கார் மோதி கட்டிட மேஸ்திரி பலி


கார் மோதி கட்டிட மேஸ்திரி பலி
x

குரிசிலாப்பட்டு அருகே கார் மோதி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 57), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாடப்பள்ளியில் இருந்து காக்கணம்பாளையம் கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குரிசிலாப்பட்டு பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த கார் காக்காணம்பாளையம் கூட்டுரோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திகேயன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குருசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story