ரூ.1¾ கோடியில் 5 அடுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி


ரூ.1¾ கோடியில் 5 அடுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி
x

குடவாசல் கோணேஸ்வரர் கோவிலில் ரூ.1¾ கோடியில் 5 அடுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் கோணேஸ்வரர் கோவில் சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலாகும். மேலும் இக்கோவில் மகாமக சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழக அரசு, 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்ட உபயதாரர் நிதி மூலம் ரூ.1 கோடியே 75 லட்சம் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணியினை நேற்று தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து குடவாசல் கோணேஸ்வரர் கோவிலில் அரசு சார்பில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு தலைமை தாங்கினார். உதவி கோட்ட பொறியாளர் குலோத்துங்கன், குடவாசல் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதல் கல்லை இணை ஆணையர் ராமு எடுத்து வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கங்காதரன், தக்கார் கருணாநிதி, நகர தி.மு.க. செயலாளர் சேரன், பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி முருகேசன், துணைத்தலைவர் குணசேகரன், கோவில் கணக்காளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story