குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி


குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி
x

கபிஸ்தலம் அருகே குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

பாலம் கட்டும் பணி ஆய்வு

கபிஸ்தலம் அருகே அய்யம்பேட்டை கணபதி அக்ரஹாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே தஞ்சை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கோட்டத்தின் மூலம் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உள் தணிக்கைக்கான அமைக்கப்பட்ட விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் சத்திய பிரகாஷ் தலைமையிலான பொறியாளர் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தர கட்டுப்பாடு சோதனை

இந்த பாலத்தின் நீளம், அகலம், உள்ளிட்டவை அளந்து பார்த்தும், கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த தர கட்டுப்பாடு சோதனைகளை மேற்கொண்டனர்.பின்னர் அந்த குழுவினர் தஞ்சாவூரில் நடைபெற்று வரும் பாலப்பணிகள் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கோட்ட பொறியாளர் பூங்கொடி, திருச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் கேசவன் மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், பணியாளர்கள், உடனிருந்தனர்.


Next Story