ரூ.6 லட்சத்தில் புதிய குளம் அமைக்கும் பணி


ரூ.6 லட்சத்தில் புதிய குளம் அமைக்கும் பணி
x

ரூ.6 லட்சத்தில் புதிய குளம் அமைக்கும் பணியை சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

தேசிய பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு மத்திய அரசு மாவட்டந்தோறும் நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு நீர்நிலைகளை உருவாக்கும் அம்ரித் சரோவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி 15-வது நிதி குழு மானியம் மூலம் அரக்கோணம் அடுத்த அரிகிலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாளையகார கண்டிகை பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. சு.ரவி கலந்து கொண்டு புதிய குளம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நெமிலி ஒன்றிய கவுன்சிலர் வினோத் குமார், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story