ரூ.7 கோடியில் புதிய சுற்றுலா மாளிகை கட்டும் பணி
ரூ.7 கோடியில் புதிய சுற்றுலா மாளிகை கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மாளிகை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது 70 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டவரப்பட வேண்டும் எனவும், ஒருசில அறைகளின் ஜன்னல்களை மாற்றியமைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனி, உதவி செயற்பொறியாளர் தேவன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, நாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story