கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி


கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் அருகே மீனவ கிராமத்தில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் அருகே மீனவ கிராமத்தில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

கடல் அரிப்பு

பூம்புகார் அருகே புதுகுப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புதுகுப்பம் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவதால் கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்து வருகிறது. மேலும் மீன்பிடி தொழில் செய்ய மீனவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.எனவே தங்கள் பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

கருங்கல் தடுப்புச்சுவர்

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு புதுகுப்பம் கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர், மீன்பிடி வலை பின்னும் கூடம், அணுகு சாலை உள்ளிட்டவை அமைக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்தது.இதனைத் தொடர்ந்து நேற்று புதுகுப்பம் கடற்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பஞ்சு குமார் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் வரவேற்றார். விழாவில் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மீன்வளத்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் ரவீந்திரநாத், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை, கிராம பஞ்சாயத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story