பள்ளிகளில் கட்டிடங்கள் கட்டும் பணி


பள்ளிகளில் கட்டிடங்கள் கட்டும் பணி
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி ஒன்றியத்தில் பள்ளிகளில் கட்டிடங்கள் கட்டும் பணிகறை ஒன்றிய ஆணையா் ஆய்வு

மயிலாடுதுறை

திருவெண்காடு:

தமிழக முதல்- அமைச்சரின் பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் பல்லவனம், அன்னப்பன் பேட்டை, செம்மங்குடி, புதுத்துறை, புங்கனூர், சட்டநாதபுரம், காவலம்பாடி, வானகிரி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட 9 இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது கட்டிட கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோவன் பள்ளி கட்டிட பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் விரைந்து பள்ளி கட்டிட கட்டுமான பணிகளை முடிக்க கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது ஒன்றிய பொறியாளர்கள் தெய்வானை, சிவக்குமார், கலையரசன் ஆகியோர் இருந்தனர்.


Related Tags :
Next Story