துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கால்வாய், பைப் லைன் அமைக்கும் பணி


துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கால்வாய், பைப் லைன் அமைக்கும் பணி
x

துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கால்வாய், பைப் லைன் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர்

ஆம்பூர்

துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கால்வாய், பைப் லைன் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

மாதனூர் ஊராட்சி ஒன்றியம, ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் சுமார் 40 வருட கால கோரிக்கையான சிங்தெருவில் கால்வாய் மற்றும் பேவர் பிளாக் ரோடு, இந்திரா நகர் பகுதியில் 150 மீட்டர் வரை கழிவுநீர் கால்வாய், அன்னை சத்யா நகரில் கழிவுநீர் கால்வாய் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியில் பைப் லைன் ஆகியவை அமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேசிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஊராட்சி மன்ற தலைவர் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று திட்டப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.

அதன் பேரில் 15-வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் மூலமாக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜய் மற்றும் வார்டு உறுப்பினர் விஜயா சேகர், நிதா ஆப்ரீன் அக்பர், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story