பாலப்பள்ளம் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணி;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


பாலப்பள்ளம் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணி;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

பாலப்பள்ளம் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி

கருங்கல்,

பாலப்பள்ளம் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பணி

பாலப்பள்ளம் பேரூராட்சியில் 17-வது வார்டுக்கு உட்பட்ட ஆலஞ்சி, வாருவிளை, தென்னிவிளை பகுதிகளில் காங்கிரீட் சாலை அமைப்பதற்காக 15-வது மானிய நிதி குழு மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து காங்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. சாலை பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், 17-வது வார்டு கவுன்சிலர் பெலிக்ஸ் ஆன்றனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story