ரூ.4 கோடியில் நுகர்பொருள் வாணிப கிடங்கு கட்டும் பணி
ரூ.4 கோடியில் நுகர்பொருள் வாணிப கிடங்கு கட்டும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
வேலூர்
அணைக்கட்டு தாலுகா கருங்காலி ஊராட்சியில் நுகர் பொருள் வாணிப கிடங்கு அமைக்கும் பணியை நேற்று காலை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்து விளக்கேற்றி பணியை தொடங்கி வைத்தார்.
வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் ராஜா, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் கார்த்திகை சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகர், சாந்தி, அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் கருங்காலி ஊராட்சி மன்ற தலைவர் சுமித்ரா துணைத் தலைவர் கோடீஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story