மலட்டார் ஓடையில் அணை கட்டும் பணி தொடக்கம்


மலட்டார் ஓடையில் அணை கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே மலட்டார் ஓடையில் அணை கட்டும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே முள்ளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்துக்குமாரபுரம் கிராமத்தில் உள்ள மலட்டார் ஓடையின் குறுக்கே ரூ.4 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் அணை கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நீர்வள ஆதாரத்துறை கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் சுபாஷ் முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ அணை கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து முத்துக்குமாரபுரம், முள்ளூர், அய்யர்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 277 வீடுகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்பு பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் முத்துக்குமாரபுரம், பட்டியூர் ஆகிய கிராமங்களில் தலா ரூ.5½ லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிகள், கீழசெய்தலை கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் ரேஷன்கடை கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஓட்டப்பிடாரம் யூனியன் துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராமராஜ், உதவி பொறியாளர் விக்னேஷ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், ஒன்றிய செயலாளர் அன்புராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story