மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி


மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி
x

மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

ராணிப்பேட்டை

மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக நந்தியாலம் தலைமை நீரேற்று இரண்டாவது குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனை மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் எஸ்.டி.முகம்மது அமீன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் குடிநீர் குழாயினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து டி.கே.பாபு சாஹிப் தெருவில் சுமார் 6 அடி ஆழத்தில் குடிநீர் குழாய் செல்வதால் அந்த பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

அப்போது நகரமன்ற துணைத்தலைவர் குல்சார் அஹமத், நகரமன்ற உறுப்பினர் அப்துல்ஹலீம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story