ரூ.17 லட்சத்தில் குடிநீர் தொட்டி கட்டும் பணி
வாணியந்தல் கிராமத்தில் ரூ.17 லட்சத்தில் குடிநீர் தொட்டி கட்டும் பணிையை உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சிங்காரம் ராமச்சந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு ரூ.17 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை உதயசூரியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். மேலும் அவர், ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமும், ரவிச்சந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அரவிந்தன், ஒன்றிய அவைத்தலைவர் ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர் பிரியா ராஜாராம், ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிவண்ணன், தாசில்தார் சத்தியநாராயணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.