பண்ணை குட்டை அமைக்கும் பணி


பண்ணை குட்டை அமைக்கும் பணி
x

பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்குட்பட்ட மூர்த்தியூர் பகுதியில் புதிதாக பண்ணை குட்டை அமைப்பதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது. ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் பண்ணை குட்டை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். 15 அடி நீளம், 15 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்ட பண்ணை குட்டையில் மீன் பண்ணை அமைத்து வாழ்வாதாரம் பெற முடியும். இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது.

மேலும் மண்டலவாடி ஊராட்சிக்குட்பட்ட 7-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) சின்னத்தம்பி உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


Next Story