உடுமலை கழுத்தறுத்தான் பள்ளம் அருகே தரை மட்ட பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
உடுமலை கழுத்தறுத்தான் பள்ளம் அருகே தரை மட்ட பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
தளி
உடுமலை கழுத்தறுத்தான் பள்ளம் அருகே தரை மட்ட பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
கழுத்தறுத்தான் ஓடை
உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய்க்காக கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் பொள்ளாச்சி- பழனி சாலையில் இருந்து இணைப்பு சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் பேரில் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு பணி தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு செல்வதற்கு இந்த சாலையை பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்ததை யொட்டி புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன் பின்பு பணிகள் நடைபெறவில்லை.
விரைந்து முடிக்க வேண்டும்
இதன் காரணமாக ஆண்டாள் சீனிவாசன் லே அவுட், பெரியார் நகர், பழனியாண்டவர் நகர், ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு வேறு சாலை வழியாக சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து கால்வாய் ஓரத்தில் வசித்து வருகின்ற பொதுமக்களுக்கு உடல் நல குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன் பொள்ளாச்சி - பழனி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியவாறு பெரிய அளவில் குழி வெட்டப்பட்டு உள்ளதால் அந்தப் பகுதியை கடக்கும்போது வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இதனால் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே கழுத்தறுத்தான் பள்ளம் அருகே கிடப்பில் போடப்பட்ட தரைமட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வா வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.