உயர் தொழில் நுட்ப விதைச்சான்று மைய கட்டிடம் கட்டும் பணி


உயர் தொழில் நுட்ப விதைச்சான்று மைய கட்டிடம் கட்டும் பணி
x

உயர் தொழில் நுட்ப விதைச்சான்று மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது.

திருச்சி

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த விதைச்சான்று மைய கட்டிடத்திற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று திருச்சியில் நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த விதைச்சான்று மைய கட்டிடம் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கீழ் தளம் 7 ஆயிரம் சதுர அடியில் உயர் தொழில் நுட்பத்தில் விதை பரிசோதனை நிலையம், விதை முளைப்புதிறன் அறை, குளிர் சாதன சேமிப்பு அறை மற்றும் அலுவலகத்திற்கான அறைகளும் அமைய உள்ளது. மேலும் முதல் தளம் 6 ஆயிரம் சதுர அடியில் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகங்களும் மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவை அமையவுள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணியினை வேளாண் வணிக வாரியத்தின் திருச்சி பொறியியல் பிரிவு வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.


Related Tags :
Next Story