ரூ.1¾ கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி


ரூ.1¾ கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி
x

ரூ.1¾ கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை வில்வநாதன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொல்லகுப்பம் ஊராட்சியில் வாணியம்பாடி- உமாபாராத் சாலையில் பாலாற்றின் கிளை ஆறான கானாற்றின் குறுக்கே தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர் மட்ட பாலம் அமைப்பதற்கான பணிக்கான பூமிபூஜையை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து புதூர் பகுதியில் கானாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை, மழை வெள்ளத்தில் சேதமடைந்ததை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி, செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story