இலங்கை தமிழர்களுக்கு ரூ.11 கோடியில் வீடுகள் கட்டும் பணி


இலங்கை தமிழர்களுக்கு ரூ.11 கோடியில் வீடுகள் கட்டும் பணி
x

மின்னூர் ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.11 கோடியில் வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வுசெய்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூரைஅடுத்த மின்னூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் 76 வீடுகளும், சின்னப்பள்ளிகுப்பம் பகுதியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 160 வீடுகளும் என மொத்தம் ரூ.11 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 236 வீடுகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வீடுகள் கட்டுமான பணிகளை வேலையாட்களை அதிகப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல், உதவி பொறியாளர் பூபாலன், பணி மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story