ரூ.1¾ கோடியில் அறிவு சார் நூலகம் கட்டும் பணி
திருக்கோவிலூரில் ரூ.1¾ கோடியில் அறிவு சார் நூலகம் கட்டும் பணி நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.1 கோடியே 92 லட்சம் செலவில் அறிவுசார் நூலகம் கட்டும் பணி திருக்கோவிலூர்-செவலை ரோட்டில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருக்கோவிலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன் நகராட்சி ஆணையாளர் கீதா ஆகியோர் கட்டுமான பணியை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கட்டிடம் கட்டும் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி இருந்ததால் அவற்றை உடனடியாக அகற்றிவிட்டு பணியை துரிதப்படுத்த வேண்டும் என ஒப்பந்ததாரர் ஏ.எஸ்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி என்ஜினீயர் பாரதிக்கு உத்தரவிட்டனர். அப்போது நகராட்சி துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா, நகராட்சி கவுன்சிலர்கள் சாந்தபிரபாமணி, சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.