ரூ.9¼ கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள்


ரூ.9¼ கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள்
x

ரூ.9¼ கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள்

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமையான பாலம் பழுதடைந்ததால் அதன் அருகிலேயே ரூ.9 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல பழைய குடமுருட்டி ஆற்றுப்பாலத்தின் வடகரை பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது பாபநாசம் உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பானுதாசன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், தி.மு.க. பாபநாசம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் நாசர், ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூர் தி.மு.க.செயலாளர் வக்கீல் டி.பி.டி.துளசி அய்யா, பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், பேரூராட்சி செயல் அதிகாரி ராஜசேகர், பேரூராட்சி துணை தலைவர் அழகேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story