ரூ.82 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி


ரூ.82 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலுக்கு ரூ.82 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலுக்கு ரூ.82 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

5 தேர்கள்

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அட்சயலிங்க சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 1928-ம் ஆண்டு நடைபெற்றது. பிரம்மோற்சவத்தில் சாமி, அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் என மொத்தம் 5 தேர்கள் ஓடி உள்ளன. அதன்பின் உற்சவம் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சட்டசபையில் 2022-2023-ல் நடைபெற்ற தமிழ்நாடு பட்ஜெட்டில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலுக்கு புதிய தேர் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

ரூ.82 லட்சம்...

அதைதொடர்ந்து இக்கோவிலில் 95 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நிதியிலிருந்து ரூ 50 லட்சம், திருக்கோவில் நிதியிலிருந்து ரூ.32 லட்சம் என மொத்தம் ரூ.82 லட்சம் செலவில் மதிப்பீடு செய்யப்பட்டு, புதிய தேர் செய்யும் பணி மற்றும் பூஜை நேற்று நடைபெற்றது.

இந்த புதிய தேர் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நாகை மாலி எம்.எல்.ஏ, வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன், கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், தாசில்தார் ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் குகன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கமலச்செல்வி, பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் கோவில் பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story