ரூ.12½ லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டும் பணி


ரூ.12½ லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டும் பணி
x

ரூ.12½ லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டும் பணி தொடங்கியது.

திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் மூன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் அமைந்துள்ளன. இப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள் அனைத்தும் சேதம் அடைந்த நிலையில் இருந்தது. அதை சரிசெய்ய அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், வார்டு உறுப்பினர் தனலட்சுமிசங்கர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சேதம் அடைந்த பள்ளிகளை உடனடியாக இடித்து, நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12½ லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார், தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர்கள், நிலாவூர் ஊர் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story