அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணி


அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணி
x

திருவாரூர் அருகே காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர்

திருவாரூர் அருகே காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாலை அணிவித்து மரியாதை

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தார். பின்னர் அவர் திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவு இடத்திற்கு சென்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வகுப்பறை கட்டும் பணி ஆய்வு

இதனையடுத்து காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் கட்டப்படும் புதிய வகுப்பறை கட்டிடம், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகள் குறித்து தன்னார்வை தொண்டு அமைப்பினரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story