புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி


புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி ராமலிங்கம் எம்.பி. ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

தமிழகத்தின் 38-வது புதிய மாவட்டமாக மயிலாடுதுறை கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு டிசம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் கலெக்டர் அலுவலகம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை ராமலிங்கம் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து மணக்குடியில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் நடைபெறும் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமான முறையில் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது நகரசபை தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, பொறியாளர் சனல்குமார் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story