ரூ.15 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டும் பணி


ரூ.15 லட்சத்தில்  புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டும் பணி
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே ரூ.15 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டும் பணி ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மகாராஜபுரம் ஊராட்சி மணலூர் கிராமம் தெற்கு தெருவில் பாரத பிரதமர் ஆகாஷ் யோகிதா ஜனம் திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும்பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான மூவலூர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா வேதநாயகம் முன்னிலை வகித்தார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி கலந்து கொண்டு செங்கல் எடுத்து வைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மாலதி, திருமங்கலம் தி.மு.க. கிளைச் செயலாளர் மணிமாறன், வார்டு உறுப்பினர் காமராஜ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் நீலமேகம், ரமேஷ், அசோக் ராஜன், நாகராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஏன் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story