பழனி முருகன் கோவிலில் புதிய தூண்கள் அமைக்கும் பணி


பழனி முருகன் கோவிலில் புதிய தூண்கள் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:17:24+05:30)

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய தூண்கள் அமைக்கப்பட்டது.

திண்டுக்கல்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி ரூ.16 கோடியில் கட்டுமானம் மற்றும் அழகுபடுத்துதல் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாயக்கர் மண்டபத்தில் சேதமடைந்திருந்த 3 தூண்கள் அகற்றப்பட்டது. இதையடுத்து ரூ.8 லட்சம் மதிப்பில் சுமார் 20 டன் எடையில் 2 புதிய தூண்கள், 1 உத்திரம், 1 பாவுதூண் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story