புதிய குளம் அமைக்கும் பணி


புதிய குளம் அமைக்கும் பணி
x

சங்கராபுரம் அருகே புதிய குளம் அமைக்கும் பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே கிடங்குடையாம்பட்டு ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.24 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் புதியதாக குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு புதிதாக குளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், குளப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்யமுடியாத வகையில் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் மரக்கன்றுகளை அதிக அளவில் நட்டு அதனை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் .திட்ட இயக்குனர் மணி, செயற்பொறியாளர் செல்வகுமார், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், தாசில்தார் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளர் சபான்கான், வருவாய் ஆய்வாளர் திருமலை, ஊராட்சிமன்ற தலைவர் ரமேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ரவி, சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story