ரூ.20 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி


ரூ.20 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி
x

ரூ.20 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டும் பணியை வில்வநாதன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த மின்னுர் மற்றும் ஆலங்குப்பம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடைகள் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதிவேலு, ஜோதிவேலு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாண்டு, பொன்னி கப்பல்துறை மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story