அழகப்பபுரத்தில்புதிய ரேஷன் கடை கட்டிம்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார


அழகப்பபுரத்தில்புதிய ரேஷன் கடை கட்டிம்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அழகப்பபுரத்தில்புதிய ரேஷன் கடை கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

அழகப்பபுரத்தில் ரூ.9.13 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன்கடை கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

ரேஷன்கடை திறப்பு

குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பூமாரி பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இவ்விழாவுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் தாசில்தார் கைலாஸ் குமாரசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா, ஒன்றிய பொறியாளர் வெள்ளப்பாண்டி, தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சதிஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், அரசு வக்கீல் பூங்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அங்கு உடற்பயிற்சி கூடம் அமைத்து கொடுத்தற்கு அழகப்பபுரம் இளைஞரணியினர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

அம்மன்புரம்

குரும்பூர் அருகிலுள்ள அம்மன்புரம் பஞ்சாயத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்திலும், நல்லூர் பஞ்சாயத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தில் உணவு கூடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டோ, தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ், அம்மன்புரம் பஞ்சாயத்து தலைவர் ஞானராஜ், துணைத்தலைவர் விக்னேஷ், நல்லூர் பஞ்சாயத்து தலைவர் சித்ரா பரிசமுத்து, திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story