ரூ.1.68 கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி
தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் இருந்து கோவங்காடுக்கு ரூ.1.68 கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஏரல்:
தூத்துக்குடி-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் இருந்து கோவங்காடு செல்லும் சாலையானது மிகவும் மோசமாக இருந்தது. இந்த சாலை ரூ.1 கோடியே 68 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணியை நேற்று மாலை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், பழையகாயல் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், காங்கிரஸ் கிழக்கு வட்டார தலைவர் தாசன், கோவங்காடு கிராம கமிட்டி தலைவர் பால்ராஜ், ஸ்ரீவைகுண்டம் உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் சிவசண்முகநாதன், சாலை ஆய்வாளர் தனலட்சுமி, சாலை பணியாளர் வேலுச்சாமி, ஏரல் பேரூர் தி.மு.க. செயலாளர் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.