ரூ.48¼ லட்சத்தில் புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டும் பணி


ரூ.48¼ லட்சத்தில் புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டும் பணி
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவிலில் ரூ.48¼ லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டும் பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

செம்பனார்கோவிலில் ரூ.48¼ லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டும் பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சியில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்ட ரூ.48.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிவேதா முருகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார், விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

இதில் தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அமுர்த விஜயகுமார், அன்பழகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story