கடத்தூரில் ரூ.42½ லட்சத்தில் ஊராட்சி செயலகம் கட்டும் பணி தொடக்கம்
கடத்தூரில் ரூ.42½ லட்சத்தில் ஊராட்சி செயலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
சின்னசேலம்,
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடத்தூர் கிராமத்தில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி செயலகம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பேபி அய்யாசாமி, ஒன்றிய பொறியாளர் அசோக்காந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்புமணிமாறன் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆசிரியர் அன்பரசு, வார்டு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் எலியத்தூரிலும் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி செயலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன், துணைத் தலைவர் பச்சையம்மாள் அண்ணாமலை, தெங்கியாநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.