ரூ.19½ கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி


ரூ.19½ கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி
x

ஆம்பூர் அருகே ரூ.19½ கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியை வில்வநாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கென்னடிகுப்பம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.19 கோடி 54 லட்சம் மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் மற்றும் மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் ப.ச.சுரேஷ்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோமதி வேலு, கார்த்திக் ஜவகர், கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) சுந்தர், வாணியம்பாடி உதவி கோட்ட பொறியாளர் (திட்டங்கள் ) பாபு மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story