மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி
மேல்விஷாரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி
ராணிப்பேட்டை
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீலாபாத் 3-வது தெரு, 8-வது குறுக்குச்சந்து ஆகிய பகுதிகளில் மழை நீர் கால்வாய் இல்லாததால் மழைக்காலங்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வீட்டுக்குள் செல்வதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
எனவே தங்கள் பகுதியில் மழை நீர் கால்வாய் அமைத்து தரும்படி நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அப்பகுதியில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதனை நகர மன்ற தலைவர் எஸ்.டி.முகம்மது அமீன் தொடங்கி வைத்தார்.
இதில் நகரமன்ற துணைத் தலைவர் குல்சார் அஹமத், நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story