ரூ.6 லட்சம் மதிப்பில் பக்க கால்வாய் அமைக்கும் பணி
பழங்கோவில் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் பக்க கால்வாய் அமைக்கும் பணியை சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை
கலசபாக்கம்
கலசபாக்கம் ஒன்றியம் பழங்கோவில் ஊராட்சியில் கழிவு நீர் வெளியேற்றுவதற்காக பக்க கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை ஏற்று பக்க கால்வாய் அமைக்க கலசபாக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து பக்க கால்வாய் அமைக்கும் பணியை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.சரவணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது ஒன்றியக்குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story