குளத்தில் படித்துறை அமைக்கும் பணி
திருமருகலில் குளத்தில் படித்துறை அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது. இந்த குளத்தில் படித்துறை இல்லாததால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு படித்துறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுரேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story