ரூ.70 லட்சத்தில் ஓடை கட்டும் பணி
சேலம் மாநகராட்சி மணியனூர் பகுதியில் ரூ.70 லட்சத்தில் ஓடை கட்டும் பணியை மேயர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
சேலம்
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் 51-வது வார்டு மணியனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.70 லட்சத்தில் புதிதாக ஓடை அமைக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த பணியை மேயர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து படையப்பா ரோட்டில் தமிழ்நாடு நகர்ப்புர சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். பின்னர் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரி அலுவலர்களிடம் கூறினார். இந்த ஆய்வில் மண்டல குழு தலைவர் அசோகன், செயற்பொறியாளர் செந்தில்குமார், வார்டு கவுன்சிலர் பி.எல். பழனிசாமி, வார்டு தி.மு.க. செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story