தார்ச்சாலை அமைக்கும் பணி
தார்ச்சாலை அமைக்கும் பணி
நாகப்பட்டினம்
நாகை புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்தும் விதமாக தார்ச்சாலை அமைத்தல், பஸ் நிறுத்தத்திற்கு கட்டுமான பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அருகில் உள்ள அவுரி திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. எனவே புதிய பஸ் நிலைய பராமரிப்பு பணிகளை நாகை நகரசபை தலைவர் மாரிமுத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story